வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்:பாராளுமன்றத்திற்கு

வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்: பாராளுமன்றத்திற்கு அப்பால் என்பது அரசாங்கம் அதன் வருடாந்த வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள செயற்திறனை கண்காணிப்பதற்காக publicfinance.lk இல் தொழிற்படும் ஒரு டாஷ்போர்ட் ஆகும்.
அதன் தொழிற்பாடு மற்றும் விரிவான விளக்கங்கள்

ஒவ்வொரு முன்மொழிவுகளினதும் செயன்முறை, முன்னேற்றம் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான விளக்கங்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும். மூல ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள தயவு செய்து pfp@veriteresearch.org ஐ அணுகவும்.

வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்

அரசாங்கம் செய்வதை சொல்கின்றதா?

முன்னேற்றக் கண்காணிப்பான்

அரசாங்கம் சொல்வதை செய்கின்றதா?
  •  தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
  •  கைவிடப்பட்டுள்ளது
  •  முன்னேற்றம் அற்றது
  •  பகுதியளவு நிறைவேறியது
  •  கணிசமானளவு நிறைவேறியது
  •  முற்றாக நிறைவேறியது

முன்மொழிவுகள் பட்டியல்

ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
அரச நிறுவனம்
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
முன்னேற்றக் கண்காணிப்பான்
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
125,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
2021 ஆம் ஆண்டில் அனைவருக்கும் நீர் - இந் நடைமுறையின் கீழ், நாளாந்த நீர் விநியோகத்தின் அளவை 2.1 மில்லியன் கனமீட்டரிலிருந்து 4.4 மில்லியன் கனமீட்டராக அதிகரிக்கவும், நாடு முழுவதிலும் ஆகக் குறைந்தது 40,000 கி.மீ. எல்லைக்குள் குழாய்களைப் பொருத்துவதன் மூலம் மேலும் 3.5 மில்லியன் குடும்பங்களுக்கு குடிப்பதற்குத் தேவையான குழாய் நீரை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 2021 ஆம் ஆண்டில் இம் முயற்சியை ஆரம்பித்து 263 சமுதாய நீர் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் 171 திட்டங்கள் மூலம் தற்போதைய நீர் விநியோகத்தின் பயன்பாட்டை அதிகரிக்கவும் மேலும் 40 புதிய திட்டங்களை ஆரம்பிக்கவும் 125 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இவ் ஒதுக்கீட்டுடன், வங்கி நிதியுதவி பெறுவதற்கு திரைசேரியின் உத்தரவாதமும் வழங்கப்படும்.
அரச நிறுவனம்
நீர் வழங்கல் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
பதிலளிக்கக்கூடிய
முன்னேற்றக் கண்காணிப்பான்
குறைபாடுகளைக் கொண்டது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
5,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
குடிநீர் - அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கான அரசாங்கத்தின் இலக்ககிற்கு இணங்க 2021 ஆம் ஆண்டில், சமூக குடிநீர் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர் நிலைகளை அபிவிருத்தி செய்தல் என்பவற்றோடு, 450,000 வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்புகளையும் வழங்குவதற்காக மேலதிகமாக .5,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.
அரச நிறுவனம்
நீர் வழங்கல் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
கட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளிப்படுத்தப்படாதது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
20,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
தேசிய பாதுகாப்பு - இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டமிடல்கள் ஊடாக அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக முப்படைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இடைக்கால திட்டத்தில் முப்படையினரின் தொழில் சார்ந்த திறன்களை மேம்படுத்துதல் மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கான அணுகலை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்
அரச நிறுவனம்
பாதுகாப்பு அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மூடிய நிலையில் உள்ள
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளிப்படுத்தப்படாதது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
20,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
100,000 கிலோமீற்றர் பாதை நிகழ்ச்சித் திட்டம் - 100,000 கிலோமீட்டர் பாதைகள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், ஏறத்தாழ அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கியதாக 50,000 கிலோமீட்டர் கிராமப்புற பாதைகளை அமைத்தல்
அரச நிறுவனம்
நெடுஞ்சாலைகள் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மூடிய நிலையில் உள்ள
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளிப்படுத்தப்படாதது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
7,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கிராமப்புற பாலங்களின் மேம்பாடு - கிராமியச் சூழலில் உள்ள 12,000 கிராமங்களை கிராமத்திற்கு வெளியில் உள்ள சுற்றுச்சூழலுடன் இணைப்பதற்கு உதவும் வகையில், 10,000 கிராமப்புற பாலங்கள் சிறிய வாகனங்களை ஓட்டிச் செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்படவுள்ளன
அரச நிறுவனம்
நெடுஞ்சாலைகள் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மூடிய நிலையில் உள்ள
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளிப்படுத்தப்படாதது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
15,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
"கிராமத்திற்கும் தொடர்பாடல் ” (communication for the village) - 100 சதவீத 4G/ஃபைபர் பிராட்பேண்ட் கவரேஜை உறுதி செய்வதற்காக இரத்தினபுரி மாவட்டத்தில் இத் திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு 2021-2022 காலகட்டத்தில் தொலைத்தொடர்பு மேம்பாட்டு நிதியிலிருந்து.15,000 மில்லியன் ரூபாவினை முதலீடு செய்து நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
அரச நிறுவனம்
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்காத
முன்னேற்றக் கண்காணிப்பான்
நிறைவேற்றப்பட்டது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
10,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
தொழில்நுட்ப பூங்காக்கள் - காலி, குருநாகல், அனுராதபுரம், கண்டி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 5 முழுமையான ஆளியை இணைத்தலும் விளையாடுதலும் (plug and play) பூங்காக்களை நிறுவுதல்
அரச நிறுவனம்
தொழில்நுட்ப அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்காத
முன்னேற்றக் கண்காணிப்பான்
பக்கச் சார்பானது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
8,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
தொழில்நுட்ப மேம்பாடு - சுய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவோரின் மேம்பாடு, தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் தொடர்புடைய சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை தொழில்நுட்ப அடிப்படையிலான சுய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவோரின் பொருளாதாரமாக மாற்றும் நோக்கத்துடன் இவ் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொருளாதாரம். சர்வதேச மின்னணு வர்த்தகம் (e-commerce) மற்றும் மின்னணு கட்டணம் (e-payment) முறைமைகளை நிறுவுதல், அதிவேக தரவு பரிமாற்ற அமைப்பு மற்றும் தொடர்புடைய மொபைல் வலையமைப்புகள் ஆகியவை முதலீட்டு முன்னுரிமைப் படுத்தல்களாகும்
அரச நிறுவனம்
தொழில்நுட்ப அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்காத
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளிப்படுத்தப்படாதது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
3,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
யானை மனித மோதல் - யானை வேலி மற்றும் அகழிகளை அமைத்தல், மேலும் விலங்குகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் போது வனவிலங்கு பகுதிகளில் தொட்டிகள் கட்டுதல், வனவிலங்கு வாழ்விடங்களைப் பாதுகாத்தல், மேலும் சமூக பாதுகாப்பு வழிமுறைகளில் ஈடுபடுவதற்கு சமூகங்களுக்கு அதிகாரம் அளித்தல்
அரச நிறுவனம்
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்காத
முன்னேற்றக் கண்காணிப்பான்
அரைகுறையான.
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
3,500
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வன பாதுகாப்பு - 15,000 ஏக்கர் நிலப்பரப்பில் காடுகளை விரிவுபடுத்தல். சட்டவிரோத காடழிப்பைத் தடுக்க இலங்கை விமானப்படையின் கண்காணிப்பை பலப்படுத்துவதோடு மீள்காடு வளர்ப்பை மேற் கொள்ளுதல்
அரச நிறுவனம்
வன பாதுகாப்புத் திணைக்களம்
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
கட்டுப்படுத்தப்பட்ட
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளிப்படுத்தப்படாதது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
10,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சமுர்த்தி குடும்பங்களை வலிமைப்படுத்தல் - சுமார் 200,000 சமுர்த்தி குடும்பங்களை மையமாகக் கொண்டு குடும்பப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்திற்கு ஆதரவளித்து, அதன் மூலம் அவர்களது கிராமங்களை வலுவூட்டுதல்
அரச நிறுவனம்
சமுர்த்தி திணைக்களம்
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
திறந்த நிலையில் உள்ள
முன்னேற்றக் கண்காணிப்பான்
கணிசமான
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சுய தொழில்முயற்சிகளில் ஈடுபடும் இளம் பெண்கள் - சமுர்த்தி குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 25,000 பெண் தொழில்முயற்சியாளர்களை இலக்காகக் கொண்டு அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கடைகளின் வலையமைப்பு போதுமான அளவு விரிவுபடுத்தப்பட்டுள்ள ஒரு கடையை நிறுவுதல். அரசாங்க அனுசரணை மற்றும் வங்கிக் கடன் வசதிகளின் கீழ் இயங்கும் இந்தக் கடைகளின் வலையமைப்பின் கீழ், உள்ளூர் பொருட்களை விற்பனை செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசாங்கம் சமுர்த்தி வங்கிகள் மற்றும் ஏனைய அரச வங்கிகள் ஊடாக கடன் வசதிகளை வழங்குவதுடன் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக விசேட காப்புறுதி திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது
அரச நிறுவனம்
சமுர்த்தி, உள்நாட்டுப் பொருளாதாரம், நுண் நிதி, சுயதொழில் மற்றும் வணிக அபிவிருத்திக்கான அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
கட்டுப்படுத்தப்பட்ட
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளிப்படுத்தப்படாதது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
6,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சட்டத்துறை உள்கட்டமைப்பு மேம்பாடு - உயர் நீதிமன்றங்கள் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் உட்பட முழு சட்ட அமைப்பிலும் நீதிபதிகள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதையும், அந்த வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்கு தேவையான உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதையும் இலக்காகக் கொண்ட விரைவானதும் தீவிரமானதுமான 3 ஆண்டு செயல் திட்டம்
அரச நிறுவனம்
நீதி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்காத
முன்னேற்றக் கண்காணிப்பான்
குறைபாடுகளைக் கொண்டது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
6,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கிராமப்புற மருத்துவமனைகளின் அபிவிருத்தி - கிராமப்புற மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துவமனைகளை மேம்படுத்துதல்
அரச நிறுவனம்
சுகாதார அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
பதிலளிக்கக் கூடிய
முன்னேற்றக் கண்காணிப்பான்
ஒழுங்கற்றது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
10,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
மக்களை மையமாகக் கொண்ட சுகாதார சேவை - மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவ மனைகள், மருந்தகங்கள் மற்றும் வயது வந்தோர் சேவை மையங்கள், ஆய்வக சேவைகள், மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு தேவையான மனித வளங்களைக் கொண்ட மக்களை மையமாகக் கொண்ட சுகாதார சேவையை விரிவுபடுத்துவதற்கு கூடுதல் ஒதுக்கீட்டை வழங்குமாறு நான் முன்மொழிந்தேன்
அரச நிறுவனம்
சுகாதார அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
பதிலளிக்கக் கூடிய
முன்னேற்றக் கண்காணிப்பான்
ஒழுங்கற்றது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1,500
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் - நம் நாட்டில் கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு துணை உணவாக வழங்கப்படும் திரிபோஷ உற்பத்தி பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது, திரிபோஷ உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சோளம்இ சோயா மற்றும் பச்சைப்பயறு போன்ற தானியங்கள் போதியளவு இல்லாமையே இதற்கான காரணமாகும். இதன் விளைவாக திரிபோஷ வழங்கப்பட வேண்டிய கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களளில் பாதிக்கு குறைவானவர்களுக்கு மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து மூலப்பொருட்களை கொள்வனவு செய்யவும் அவற்றை திரிபோஷ உற்பத்திக்காக சேமித்து வைக்கவும் நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்படும். பெரும் போகத்தில் தானிய அறுவடையுடன் ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக, மார்ச் மாதம் முதல் கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தொடர்ச்சியாக திரிபோஷ உணவு விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அரச நிறுவனம்
பெண்கள் மற்றும் குழந்தைகள் அபிவிருத்தி முன்பள்ளிகள்> ஆரம்பக் கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்விச் சேவைகள் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
கட்டுப்படுத்தப்பட்ட
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளிப்படுத்தப்படாதது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
3,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கிராமப்புற விளையாட்டுத்துறை அபிவிருத்தி - கிராமப்புற பாடசாலைகளின் விளையாட்டு மைதானங்கள் மற்றும் கிராமப்புற விளையாட்டு சங்கங்களை அபிவிருத்தி செய்தல், பாடசாலைப் பிள்ளைகளை விளையாட்டுகளில் ஈடுபடுமாறு ஊக்குவித்தல், பிராந்திய விளையாட்டுப் பணிகளை மேம்படுத்தல், கரப்பந்தாட்டத்தை ஊக்குவித்தல், மற்றும் விளையாட்டுத் துறையில் பெண்களின் பங்குபற்றலை ஊக்குவிக்கும் வகையில் அபிவிருத்திச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல் . (கிராமத்திற்கான உதவிகள் என்னும் பிரிவில் இதனைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது) போன்றவற்றைச் செய்வதற்காக 3,000 மில்லியன் இலங்கை ரூபாவினை மேலதிகமாக ஒதுக்கீடு செய்யுமாறு நான் முன்மொழிகிறேன்
அரச நிறுவனம்
கிராமப்புற பாடசாலைகள் மற்றும் விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாடட்டு அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
திறந்த நிலையில் உள்ள
முன்னேற்றக் கண்காணிப்பான்
குறைபாட்டுடன் கூடியது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
3,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கிராமப்புற பாடசாலைகளின் அபிவிருத்தி - கிராமப்புற பாடசாலைகளுக்கு தேவையான ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்குதல்
அரச நிறுவனம்
கல்வி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மூடிய நிலையில் உள்ள
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளிப்படுத்தப்படாதது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
3,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கழிவு முகாமைத்துவம் -பிரதேச சபை - வனவிலங்குகள் வாழும் பிரதேசங்களுக்கு அருகாமையில் உள்ள கிராம எல்லைகளில் குப்பைகளை கொட்டுவதால் வனவிலங்குகள் கிராமங்களுக்கு ஈர்க்கப்படுவதை தடுக்கும் வகையில் பிரதேச சபைகளின் கழிவு முகாமைத்துவம்
அரச நிறுவனம்
பொது சேவைகள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
திறந்த நிலையில் உள்ள
முன்னேற்றக் கண்காணிப்பான்
குறைபாடுகளைக் கொண்டது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
3,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
உட்கட்டமைப்பு வசதிகள் பிரதேச சபை - பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் போதிய வருமானம் இல்லாத வீதிகளை பராமரித்தல், சத்திபொல மற்றும் பொதுப் பிரதேசங்களில் தூய்மையைப் பேணுதல், கழிவுகளை அகற்றுதல் மற்றும் சமூக சுகாதார வசதிகளை வழங்குதல்
அரச நிறுவனம்
பொது சேவைகள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
திறந்த நிலையில் உள்ள
முன்னேற்றக் கண்காணிப்பான்
பக்கச் சார்பானது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
3,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
தொலைக் கல்வி - மாகாண மட்டத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களை வலிமைப்படுத்துவதோடு மின்-தக்சலாவ கற்றல் போர்ட்டலை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கிராமப்புறங்களிலும் "தேசிய பாடசாலைகள் அல்லாத பாடசாலைகளில் கற்கும் " மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்கவும்இ கோவிட்-19 தொற்றுநோய்க்கு முகங்கொடுக்கும் வகையில் தொடர்ச்சியாக பாடசாலைக் கல்வியை வழங்குவதனை உறுதிப்படுத்தவும் 'குரு கெதர' கல்வி செனல் உருவாக்கப்பட வேண்டும். கடினமான பகுதிகளில் உள்ள பhடசாலைகளுக்கு தொலைக்காட்சி பெட்டிகளை வழங்குவதன் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் இச் செனலைப் பார்க்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
அரச நிறுவனம்
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக் கல்வி ஊக்குவிப்பு அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மூடிய நிலையில் உள்ள
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளிப்படுத்தப்படாதது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
3,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
தொழில் கல்வி - தொழிற்கல்வி நிறுவனங்களின் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அவர்களின் செயல்திறனின் அடிப்படையில் ஊக்னுவிப்புத் தொகைகளை வழங்கவும்இ தொழிற்கல்வி முறைமையின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு மாதாந்த உதவித்தொகையாக 4,000 ரூபாவினை வழங்கும்படியும் நான் பரிந்துரைக்கிறேன். அரச தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு தற்போது வருடாந்தம் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 100,000 இல் இருந்து 200,000 ஆக அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்
அரச நிறுவனம்
கல்வி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
கட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளிப்படுத்தப்படாதது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2,500
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பொது மக்களின் பாதுகாப்பு - பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொலிசாரைப் பலப்படுத்துவதில் அரசு விசேடமாகக் கவனம் செலுத்தியுள்ளது. போதைப்பொருள் பாவனையையும் அதனால் ஏற்படும் தீமைகளையும் கட்டுப்படுத்துதல், வாகனங்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை ஒழுங்குபடுத்துதல், சுற்றுலாத் துறை பொலிசாரை பலப்படுத்துதல், சிறப்பு பயிற்சிகள் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளையும் கொள்ளைகளையும் தடுப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல். பொலிஸ் ரோந்து பணியை விரிவுபடுத்தல், சிறப்பு பொலிஸ் வாகனங்களை நிறுத்துவதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதன் மூலம் சமூகப் பாதுகாப்பிற்கு ஆதரவளிக்கும் வகையில் வளங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
அரச நிறுவனம்
பொது பாதுகாப்பு அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
பதிலளிக்கக்கூடிய
முன்னேற்றக் கண்காணிப்பான்
கணிசமான
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
விளையாட்டுத்துறை பொருளாதாரம் - 2032 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்காக 2021-2024 காலப் பகுதிக்குள் விளையாட்டு வளாகத்தை நிறுவுதல், தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பெண்களின் பங்கேற்பை விரிவுபடுத்துதல் மற்றும் 2025 ஆம் ஆண்டளவில் 1,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதிமிக்க விளையாட்டுப் பொருளாதாரத்தை நிறுவுதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு 2,000 மில்லியன் இலங்கை ரூபாவினை மேலதிக ஒதுக்கீடு செய்யுமாறு நான் முன்மொழிகிறேன். குருநாகல், யாழ்ப்பாணம், டொரிங்டன், போகம்பரை மற்றும் தியகம விளையாட்டு வளாகங்களில் செயற்கை தடங்களை நிறுவுதல் மற்றும் தகவல் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சூரியவெவவில் நவீன விளையாட்டு நகரத்தை ஸ்தாபித்தல் ஆகியவையும் இந்த வேலைத்திட்டத்தில் அடங்கும். குருநாகல், யாழ்ப்பாணம், டொரிங்டன், போகம்பரை மற்றும் தியகம விளையாட்டு வளாகங்களில் செயற்கை தடங்களை நிறுவுதல் மற்றும் தகவல் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சூரியவெவவில் நவீன விளையாட்டு நகரத்தை ஸ்தாபித்தல் ஆகியவையும் இந்த வேலைத்திட்டத்தில் அடங்கும்.
அரச நிறுவனம்
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்காத
முன்னேற்றக் கண்காணிப்பான்
குறைபாடுகளைக் கொண்டது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
நடைபாதைகள் மற்றும் பொதுவான வசதிகள் - நாடு முழுவதும் உள்ள மாநகரசபைப் பகுதிகளிலும் நகர சபை; பகுதிகளிலும் நடைப் பாதைகளும் அதனுடன் தொடர்புடைய பொதுவான வசதிகள் போன்றவையும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இப் பகுதிகள் ஒவ்வொன்றினதும் உயிரியல் பன்முகத்தன்மையுடன் இணைந்த வகையில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது
அரச நிறுவனம்
நகர்ப்புற அபிவிருத்தி, கழிவு நீக்கம் மற்றும் சமூக தூய்மை அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
திறந்த நிலையில் உள்ள
முன்னேற்றக் கண்காணிப்பான்
பக்கச் சார்பானது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
தோட்டங்கள் ( பெருந்தோட்ட அமைச்சு ) - 1. கரும்புச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும் வகையில் கந்தளாய் பதுளை மொனராகலை ஆகிய பகுதிகளில் கரும்புச் செய்கையை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2. இலங்கை சீனி உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்தித் திறனை 70,000 மெட்ரிக் தொன்களால் அதிகரிக்கவும், சீனி உற்பத்தித் தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்தவும் எத்தனோல் மற்றும் எத்தனோல் சார்ந்த தயாரிப்புகளை மேம்படுத்தும் வகையில் வடிமனைகளை மாற்றி அமைக்கவும் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது 3. ஏற்றுமதித் துறையை அணுகும் நோக்கில் உள்ளுர் கித்துல் மற்றும் பனை சார்ந்த கைத் தொழில்களை பல்வகைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது 4. இலங்கைக் கறுவாவிற்கான ஏற்றுமதி, கருவா பயிர்ச் செய்கை மற்றும் கருவா பதப்படுத்ததல் வலயங்களை நிறுவும் நோக்கத்துடன் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5. இலங்கை முந்திரி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணியில் 6500 ஏக்கர் நிலப் பரப்பில் முந்திரி நிலத்தில் விவசாயிகளுடன் இணைந்து முந்திரியைக் பயிரிடவும் முதற்கட்ட பயிர்ச் செய்கை யின் போது உளுந்துஇ பச்சைப்பயறு மற்றும் மிளகாய் போன்ற பயிர்களை பயிரிடவும் சிவில் பாதுகாப்புத் திணைககளம் திட்டமிட்டுள்ளது. 6. இலங்கை முந்திரி கூட்டுத்தாபனம் மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் சிறு நில உரிமையாளர்களிடையே முந்திரி யிர்ச் செய்கையை யை ஊக்குவிக்கும் வகையில் விரிவாக்க சேவைகளை வழங்கும்.
அரச நிறுவனம்
"1. பெருந்தோட்ட அமைச்சு 2. நிறுவனங்களை நிறுவுவது குறித்தான சீர்திருத்தங்கள், தேயிலை தோட்ட பயிர்கள், தேயிலை தொழிற்சாலை நவீனமயமாக்கல் மற்றும் தேயிலை ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் அமைச்சு 3. தென்னை, கித்துல் மற்றும் பனை பயிர்ச்செய்கை ஊக்குவிப்பு தொடர்புடைய கைத்தொழில் தயாரிப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் அமைச்சு 4. கரும்பு மக்காச்சோளம், முந்திரி, மிளகு, கருவா கிராம்பு வெற்றிலை போன்ற சிறுபயிர்களுடன் தொடர்புடைய தொழில்கள் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு உட்பட தோட்ட வளர்ச்சிக்கான அமைச்சு "
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
கட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளிப்படுத்தப்படாதது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1,500
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சொட்டு நீர்ப்பாசனம் (பெருந்தோட்ட அமைச்சு) - சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தித் திறனை அதிகரிக்க சூரிய சக்தியில் இயங்கும் நீர்க் குழாய்களை நிறுவுவதற்கு விவசாயக் கிணறுகளுடன் கூடிய சிறு மற்றும் நடுத்தர அளவிலான சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு. 150,000 இலங்கை ரூபா முதல் 10,000 இலங்கை ரூபா வரை மூலதன மானியம் வழங்குமாறு நான் முன்மொழிகிறேன்.
அரச நிறுவனம்
"1. பெருந்தோட்ட அமைச்சு 2. நிறுவனங்களை நிறுவுவது குறித்தான சீர்திருத்தங்கள், தேயிலை தோட்ட பயிர்கள், தேயிலை தொழிற்சாலை நவீனமயமாக்கல் மற்றும் தேயிலை ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் அமைச்சு 3. தென்னை, கித்துல் மற்றும் பனை பயிர்ச்செய்கை ஊக்குவிப்பு தொடர்புடைய கைத்தொழில் தயாரிப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் அமைச்சு 4. கரும்பு மக்காச்சோளம், முந்திரி, மிளகு, கருவா கிராம்பு வெற்றிலை போன்ற சிறுபயிர்களுடன் தொடர்புடைய தொழில்கள் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு உட்பட தோட்ட வளர்ச்சிக்கான அமைச்சு "
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
கட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளிப்படுத்தப்படாதது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கனிம மணல் வகைகளின் அடையாளத்தைப் பதிவு செய்தல் - தாதுப் பொருட்கள் அடங்கிய கனிம மணல் பொசுபேற்று, உரம் மற்றும் காரீயம் போன்ற கைத்தொழில் உற்பத்திப் பொருட்களின் இலங்கை அடையாளத்தை பதிவு செய்யத் தொடங்குதல்
அரச நிறுவனம்
கைத்தொழில் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மூடிய நிலையில் உள்ள
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளிப்படுத்தப்படாதது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பாரம்பரிய கிராமங்களின் அபிவிருத்தி - பாரம்பரிய தொழில்களில் ஈடுபட்டுள்ள கிராமங்களுக்கு அவற்றின் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கும் சிறப்புப் பொருட்களுக்கான சந்தைகளை அணுகுவதற்கும் சந்தையை ஈர்ப்பதற்கும் உதவுதல்
அரச நிறுவனம்
பிரம்பு, பித்தளை, மட்பாண்டங்கள், மரத்தளபாடங்கள் மற்றும் கிராமப்புற தொழில்களின் மேம்பாட்டுக்கான அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
பதிலளிக்கக்கூடிய
முன்னேற்றக் கண்காணிப்பான்
கணிசமான
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பல்கலைக்கழக உள்கட்டமைப்பு வசதிகள் - வேலை வாய்ப்புகளுக்கான தேவை அதிகமாகக் காணப்படுகின்ற குறிப்பிட்ட சில பிரதேசங்களை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இருப்பிட வசதிகள் இல்லாத நகர பல்கலைக்கழகம் ஒன்றினை அமைக்க முன்மொழியப்படுகிறது. இதனை ஆரம்பிப்பதற்கு, அம்பாறை, புத்தளம் மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தற்போதுள்ள தொழிற்கல்வி அல்லது அரசாங்கத்திற்கு சொந்தமான ஏனைய கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மாற்றுவதற்கு நான் முன்மொழிகிறேன்.
அரச நிறுவனம்
திறன் மேம்பாடு, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
கட்டுப்படுத்தப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளிப்படுத்தப்படாதது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
குளங்களை மறுசீரமைத்தல் - 2021 ஆம் ஆண்டில் சிறுபோக பருவத்திற்குத் தயாராகும் விவசாயிகளுக்கு ஆதரவாக நீர் இருப்பை மேம்படுத்துவதற்காக விவசாயப் பகுதிகளில் உளள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான குளங்கள் புனரமைக்கப்படும்
அரச நிறுவனம்
நீர்ப்பாசன அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
பதிலளிக்கக்கூடிய
முன்னேற்றக் கண்காணிப்பான்
நிறைவேற்றப்பட்டது