வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்:பாராளுமன்றத்திற்கு அப்பால்

வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்: பாராளுமன்றத்திற்கு அப்பால் என்பது அரசாங்கம் அதன் வருடாந்த வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள செயற்திறனை கண்காணிப்பதற்காக publicfinance.lk இல் தொழிற்படும் ஒரு டாஷ்போர்ட் ஆகும்.
அதன் தொழிற்பாடு மற்றும் விரிவான விளக்கங்கள்

ஒவ்வொரு முன்மொழிவுகளினதும் செயன்முறை, முன்னேற்றம் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான விளக்கங்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும். மூல ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள தயவு செய்து pfp@veriteresearch.org ஐ அணுகவும்.

பதிவிறக்கம்

வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்

அரசாங்கம் செய்வதை சொல்கின்றதா?
  •  வெளிப்படையானது
  •  ஒத்துழைக்கப்பட்டது
  •  ஒத்துழைக்கப்படாதது
  •  மட்டுப்படுத்தப்பட்டது
  •  வெளிப்படையற்றது

முன்னேற்றக் கண்காணிப்பான்

அரசாங்கம் சொல்வதை செய்கின்றதா?
  •  தகவல் வெளிப்படுத்தப்படவில்லை
  •  கைவிடப்பட்டுள்ளது
  •  முன்னேற்றம் அற்றது
  •  பகுதியளவு நிறைவேறியது
  •  கணிசமானளவு நிறைவேறியது
  •  முற்றாக நிறைவேறியது

முன்மொழிவுகள் பட்டியல்

ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
அரச நிறுவனம்
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
முன்னேற்றக் கண்காணிப்பான்
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
250
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
அரச தனியார் பங்காண்மை தேசிய நிறுவனத்தினை (NAPPP) தாபித்தல் - அரசாங்க மற்றும் தனியார் துறை பங்குபற்றுநர்களினால் மேற்கொள்ளக்கூடிய முதலீட்டு வாய்ப்புக்களை இனங்காணுதல் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புக்கான வசதிகளை வழங்குவதற்காக அரசாங்க மற்றும் தனியார் பங்குபற்றுகையுடன் கூடிய தேசிய நிறுவனம் (National Agency for Public Private Partnership- NAPP) ஒன்று தாபிக்கப்படும். இம் முன்மொழிவினை செயற்பதுத்துவதற்காக ரூபா 250 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அரச நிறுவனம்
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
முன்னேற்றக் கண்காணிப்பான்
நிறைவேற்றப்பட்டது
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
350
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பயிர் அழிவுகளுக்கான கொடுப்பனவு - உற்பத்தியில் வீழ்ச்சி, உரம், கிருமிநாசினி பயன்பாடு போன்ற விவசாய பிரயோகங்கள் காணப்படாமை காரணமாக அண்மைக் காலமாக சிறிய விவசாயிகளுக்கு கடினமான காலப்பகுதியினை கடந்து செல்ல வேண்டி ஏற்பட்டது. இதனால் , 2 ஹெக்ரேயர் அல்லது அதற்குக் குறைந்தளவு நெற் பயிர் செய்கையில் ஈடுபட்ட ஏறக்குறைய 28,259 விவசாயிகள் 2022.05.31 ஆந் திகதிவரை அரசாங்க வங்கிகளில் பெற்ற பயிர் செய்கை கடன்களை செலுத்துவதற்கு முடியாதுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அவர்களை இச்சுமையில் இருந்து விடுவிப்பதற்கு பொதுத்துறைசேரியின் காசுப் பாய்ச்சலில் அழுத்தத்தினை ஏற்படுத்தாத வகையில் இம் முன்மொழிவினை கட்டம் கட்டமாக செயற்படுத்துவதற்கு தேவையான நிதியாக ரூபா 350 மில்லியனை நான் ஒதுக்கீடு செய்கிறேன்
அரச நிறுவனம்
அபிவிருத்தி நிதித் திணைக்களம்
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளியிடப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
250
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
இளைஞர் விவசாய நிறுவனங்களை உருவாக்குதல் - விவசாயமும் தொழில்முனைவும் இணைந்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும். நாங்கள் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதை உறுதிசெய்வதுடன் எங்கள் விவசாயத்தை ஊக்குவிக்க மறுபரிசீலனை செய்ய வேண்டும். இளைஞர்கள் புதிய தொழில்நுட்பங்களை வேகமாகக் கற்றுக்கொள்கின்றனர். அவர்கள் புதுமையான கருவிகளைப் பயன்படுத்துவதுடன் மதிப்புச் சங்கிலி முழுவதும் செயல்திறனை மேம்படுத்தலாம். இந்தச் சூழலில் இளைஞர் விவசாய நிறுவனங்களை உருவாக்கி அவற்றை 331 பிரதேச இளைஞர் கழகங்களின் கூட்டமைப்புடன் இணைத்து அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு நான் முன்மொழிகிறேன். இந்த முன்மொழிவுக்காக ரூ.250 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்
அரச நிறுவனம்
விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
மோசம்
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
200
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
உள்நாட்டு பாற் பொருள் உற்பத்தியை ஊக்குவித்தல் - உள்நாட்டு பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு உறுதியான செயற்றிட்டம் ஒன்று அவசியமாகும். இதனால் சகல தரப்பினரின் ஒத்துழைப்புடனும் அரசாங்கம் அல்லது அபிவிருத்தி பங்காளர்களினால் நிதியளிக்கப்படும் கருத்திட்டம் ஒன்றின் மூலம் தேசிய மட்ட நிகழ்ச்சித்திட்டமொன்றினை செயற்படுத்துவது அவசியமாகும். மலைநாட்டு காலநிலை உற்பத்தித் திறன் கூடியது என்ற வகையில் பெருந்தோட்டங்களில் பயன்படுத்தப்படாத அல்லது குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட காணிகளை இக்கருத்திட்டத்திற்குப் பயன்படுத்த முடியும். இதற்காக ஆரம்பத்தில் ரூ.200 மில்லியனை ஒதுக்கீடு செய்ய நான் முன்மொழிகிறேன்
அரச நிறுவனம்
விவசாய அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளியிடப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
400
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் நாற்றுப் பொருட்களை வழங்குதல் - கடந்த காலங்களில் பயிர்செய்யப்பட்ட நிலங்களின் அளவு மற்றும் விளைச்சல் குறைவடைந்ததன் காரணமாக விதைகள் மற்றும் நடுகைப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டதால், விவசாயிகளுக்குத் தேவையான விதைகள் மற்றும் நடுகைப் பொருட்களை வழங்குவதற்கு முடியுமான வகையில் விவசாயத் திணைக்களமும் அரச பண்ணைகளும் துரித நிகழச்சித்திட்டத்தை செயற்படுத்துதல் வேண்டும். இதனடிப்படையில் தேவையான விதைகளையும் நாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு ரூ.400 மில்லியனை விவசாயத் திணைக்களத்திற்கு ஒதுக்கீடு செய்ய நான் முன்மொழிகிறேன்
அரச நிறுவனம்
விவசாயத் திணைக்களம்
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளியிடப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
50
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
அரசாங்க காணிகளை வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறனுடன் பயன்படுத்த வேலையில்லா இளைஞர் யுவதிகளை ஈடுபடுத்துதல் - ஏற்றுமதி சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் உத்தியின் கீழ் விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கு அரச காணிகளைத் திறமையாகவும் உற்பத்தி ரீதியாகவும் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, வேலையற்ற இளைஞர்கள் இந்த நோக்கத்திற்காக வழிநடத்தப்படுவார்கள். அதன் பிரகாரம் தற்போது வேலையில்லாமல் உள்ள இளைஞர் குழுக்களுக்கு (10 உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கள்) 20 ஏக்கர் காணி இந்த நோக்கத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ள காணிகள் உள்ள பகுதியில் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்த ரூ.50 மில்லியனை ஒதுக்கீடு செய்ய நான் முன்மொழிகிறேன்
அரச நிறுவனம்
தீர்மானிக்கப்படவில்லை
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளியிடப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
100
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
புதிய வியாபார முயற்சிகளுக்கு (Startups) ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியை (R&D) ஊக்குவித்தலும் வணிகப்படுத்தலும் - இலங்கையின் உலகளாவிய போட்டித் தரவரிசையை வெற்றிகரமாக மேம்படுத்த ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்துவது முக்கியம் ஆகும். உள்ளுர் பல்கலைக்கழங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளின் உதவியுடன் குறிப்பாக ஸ்டார்ட்அப் கலாச்சாரத்தில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியை ஊக்குவிக்கும் பொறிமுறையை உருவாக்கவும் அதை வணிகமயப்படுத்தவும் ரூ.100 மில்லியனை ஒதுக்கீடு செய்ய நான் முன்மொழிகிறேன்
அரச நிறுவனம்
கல்வி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளியிடப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
250
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
உள்ளுர் பொதியிடல் தயாரிப்புகளை ஊக்குவித்தல் - சந்தைப்படுத்தல் மற்றும் சேமிப்பு நேரத்தை மேம்படுத்துவதன் மூலம் விவசாய உற்பத்திகளின் விரயத்தைக் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆகவே உள்ளுர் மூலப் பொருட்களைப் பயன்படுத்தி விவசாய உற்பத்திகளைப் பாதுகாத்து சந்தைப்படுத்துவதற்கு உணவுப் பொதியிடும் தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். அதன் பிரகாரம் உணவுப் பொதியிடலுக்காக இறக்குமதி செய்யப்படும் புதிய தொழில்நுட்ப உபகரணம்/கருவிகளுக்கு 50 சதவீத இறக்குமதி வரிச்சலுகை வழங்கப்படுகிறது. இதைத் தவிர, பனை அபிவிருத்திச் சபை, தேசிய வடிவமைப்பு நிலையம் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை ஆகியன ஒன்றிணைந்து புதிய பொதியிடல் திட்டத்தை அறிமுகப்படுத்துவதுடன் புதுமையான பொதியிடல் மூலம் ஏற்றுமதிச் சந்தைக்குப் பங்களிக்க வேண்டும். இந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்த ரூ.250 மில்லியனை ஒதுக்கீடு செய்ய நான் முன்மொழிகிறேன்
அரச நிறுவனம்
ஏற்றுமதி அபிவிருத்திச் சபை
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
மோசம்
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
300
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சுற்றுலா மேம்பாடு தொடர்பான நடவடிக்கைகளைச் செயல்படுத்துதல் - இந்த ஆண்டு செப்டெம்பர் முதல் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக, சுற்றுலா சபை மற்றும் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய பிற நிறுவனங்களின் ஆதரவுடன் சுற்றுலாத் துறை அமைச்சு விசேட வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள பல்வேறு இனங்களுகே உரித்தான கலாச்சார/சமய நிகழ்வுகளை இலக்கு வைப்பது அவசியமாகும். இந்தத் துறையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, 2023 இறுதிக்குள் ஆண்டொன்றுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 25 லட்சத்திற்கும் மேலாக அதிகரிக்கும் வகையில் இலக்கு நிர்ணயிக்க வேண்டும். மேலும் ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடிய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய புதிய இடங்களை அடையாளம் காண்பது, அவை தொடர்பான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5 உறுப்பினர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட வேண்டும். அவர்களது பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கை அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஒரு மாதத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த ரூ.300 மில்லியனை ஒதுக்கீடு செய்ய நான் முன்மொழிகிறேன்
அரச நிறுவனம்
சுற்றுலாத் துறை மற்றும் காணி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
மோசம்
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
200
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
முன்அனுபவம் இல்லாத தொழிலாளர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிறுவனங்களில் இருந்து பயிற்சி மற்றும் தகுதியை வழங்குதல் - " இலங்கையின் தொழிற்சந்தையில் எந்தவித முன் பயிற்சியும் இன்றி வேலையில் இணைந்து வேலை மூலம் திறன்களைப் பெற்று வேலையில் ஈடுபடுபவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இந்த குழுவிற்குப் பொருத்தமான கல்வி அறிவு உட்பட கூடுதல் பயிற்சி மற்றும் தகுதிகளை வழங்க வேண்டிய அவசியம் உள்ளது. இதன் மூலம் வேலையின் உற்பத்தித்திறனை அதிகரிக்கலாம். மேலும் திறனுள்ள தொழிலாளர்கள் மூலம் உலகளவில் வணிக நிறுவனங்கள் போட்டி நிலையைப் பெற முடியும். அத்துடன் வேலை தேடுபவர்கள் திறனுள்ள வேலை வாய்ப்புக்களையும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும் கண்டறிய முடியும். கோவிட் – 19 பெருந்தொற்று மற்றும் பொருளாதாரப் பின்னடைவு ஆகியவற்றின் காரணமாக வேலைகளை இழக்கும் மக்கள் உள்ளனர். எனவே அவர்களை புதிய வேலை வாய்ப்புகளுக்காகப் பயிற்சியளிக்க வேண்டிய தேவை உள்ளது. கிராமப் புறங்களில் இருந்து சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆதரவு நிலை ஊழியர்கள் சுமார் 5 வருடங்கள் பணிபுரிந்த பின்னர் கிராமங்களுக்குத் திரும்புகின்றனர். இங்கே பெண்கள் அதிகம் தொழில் வாய்ப்புகளை இழப்பதுடன் ஆண்கள் முறைசாரா தொழில்களில் ஈடுபடுகின்றனர். அதன் பிரகாரம், சுதந்திர வர்த்தக வலயங்களில் பணிபுரிந்த வேலைகளின் மூலம் பெற்றுக்கொண்ட திறன்களின் அடிப்படையில் புதிய வேலையைப் பெற்றுக்கொள்ள கூடுதல் பயிற்சிகளை வழங்குவது அவசியம் ஆகும். இதன் பிரகாரம், தெரிவுசெய்யப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்கள் (யூத் கார்ப்ஸ், VTA, NAITA), தொழிற்பயிற்சித் துறையின் ஒழுங்குபடுத்தும் அமைப்பான TVEC ஆகியவற்றிலிருந்து பயிற்றுவிப்பதற்கும் NVQ சான்றிதழ்களை வழங்குவதற்கும் இதன் கீழ் சாத்தியமாகும். இந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்த ரூ.200 மில்லியனை ஒதுக்கீடு செய்ய நான் முன்மொழிகிறேன்."
அரச நிறுவனம்
திறன் விருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளியிடப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
200
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
விநியோகச் சங்கிலியை மேலும் திறனுடையதாக்குவதற்கு காய்கறி மற்றும் பழங்களை விநியோகிக்க புகையிரத சேவைகளைப் பயன்படுத்துதல் - காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் தேயிலை உற்பத்திகளை மலை நாட்டிலிருந்து கொழும்பு மற்றும் நகர்புறங்களுக்கு அவை கெட்டுப்போவதற்கு முன்பாகக் கொண்டுசெல்வது விவசாயி, உற்பத்தியாளர், வர்த்தக சமூகம் மற்றும் நுகர்வோர் ஆகியோருக்கு முக்கியமானதாகும். ஆகவே இவ்வாறான பொருட்களின் போக்குவரத்திற்கு புகையிரதத்தைப் பயன்படுத்த ஊக்குவிப்பது அவசியமாகும். இதன் மூலம் விரயம், தாமதங்கள் மற்றும் செலவுகள் குறைக்கப்படுவதுடன் இலங்கைப் புகையிரத திணைக்களத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். இதற்குத் தொடக்கமாக, ஹாலிஎல புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற உற்பத்திகளை கொண்டுவருவதற்கு பொருத்தமான வசதிகளுடன் கூடிய புகையிரதம் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்திற்காக சம்பந்தப்பட்ட புகையிரத நிலையங்களில் சரக்குகளை இறக்கி ஏற்றுவதற்கான வசதிகள் மேம்படுத்த வேண்டும். கூட்டுறவு மற்றும் தனியார் தொழில்முனைவோர் பங்களிப்புடன் சரக்கு சேகரிப்பு நிலையங்களை உருவாக்குவதுடன் அந்த நிலையங்களில் இருந்து சம்பந்தப்பட்ட புகையிரத நிலையங்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதற்கான முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். கொழும்பிலிருந்து பதுளைக்கு சரக்குகளை கொண்டுசெல்ல மொத்த விற்பனையாளர்களை ஊக்குவிக்கும் பொருத்தமான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை புகையிரதத் திணைக்களம் செயலாற்ற வேண்டும். இந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்த ரூ.200 மில்லியனை ஒதுக்கீடு செய்ய நான் முன்மொழிகிறேன்
அரச நிறுவனம்
புகையிரத சேவைகள் திணைக்களம்
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளியிடப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
20,728
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
மாதாந்த சமுர்த்தி கொடுப்பனவு - மாதாந்த சமுர்த்தி கொடுப்பனவு தற்போதைய உதவித்தொகை - மாதாந்தக் கொடுப்பனவு ரூ. 420/- முதல் ரூ. 4,500/- அடுத்த 4 மாதங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள உதவித்தொகை - மாதாந்தம் குறைந்தபட்சம் ரூ. 3,000/- முதல் அதிகபட்சமாக ரூ. 3,100/-
அரச நிறுவனம்
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம்
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளியிடப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2,980
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
முதியோர்களுக்கான கொடுப்பனவு - முதியோர்களுக்கான கொடுப்பனவு தற்போதைய உதவித்தொகை - 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதாந்த உதவித்தொகை ரூ. 2,000/- மற்றும் 100 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ. 5,000/- அடுத்த 4 மாதங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள உதவித்தொகை - 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதாந்த உதவித்தொகை ரூ. 3,000/- மற்றும் 100 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ. 2,500/-
அரச நிறுவனம்
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளியிடப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
236
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
குறைந்த வருமானம் கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி - குறைந்த வருமானம் கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி தற்போதைய உதவித்தொகை - ரூ. 5,000/- அடுத்த 4 மாதங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள உதவித்தொகை - மாதக் கொடுப்பனவு ரூ. 2,500/-
அரச நிறுவனம்
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளியிடப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
212
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சிறுநீரக நோயாளிகளுக்கு உதவித்தொகை - சிறுநீரக நோயாளிகளுக்கு உதவித்தொகை தற்போதைய உதவித்தொகை - ரூ. 5,000/- அடுத்த 4 மாதங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள உதவித்தொகை - மாதக் கொடுப்பனவு ரூ. 2,500/-
அரச நிறுவனம்
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளியிடப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
17,354
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் (சமுர்த்தி, முதியோர், உடல் ஊனமுற்றோர் அல்லது சிறுநீரக உதவிக் கொடுப்பனவுகளைத் தற்போது பெறாதவர்கள் ஆனால் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள்) - பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் (சமுர்த்தி, முதியோர், உடல் ஊனமுற்றோர் அல்லது சிறுநீரக உதவிக் கொடுப்பனவுகளைத் தற்போது பெறாதவர்கள் ஆனால் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள்) தற்போதைய உதவித்தொகை - ரூ. 5,000/- மே, ஜுன் மற்றும் ஜுலை ஆகிய மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது அடுத்த 4 மாதங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள உதவித்தொகை - மேலும் நான்கு மாதங்களுக்கு ரூ. 5,000/- கொடுப்பனவு
அரச நிறுவனம்
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளியிடப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2,650
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொதி - கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொதி தற்போதைய உதவித்தொகை - ரூ. 20,000/- உதவித்தொகை வழங்கப்படுகிறது அடுத்த 4 மாதங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள உதவித்தொகை - மாதக் கொடுப்பனவு ரூ. 2,500/-
அரச நிறுவனம்
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளியிடப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2,440
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
உடனடி நிவாரணத்துக்காக அடையாளம் காணப்பட்ட குடும்பங்கள் - உடனடி நிவாரணத்துக்காக அடையாளம் காணப்பட்ட குடும்பங்கள் அடுத்த 4 மாதங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள உதவித்தொகை - மாதக் கொடுப்பனவு ரூ. 10,000/-
அரச நிறுவனம்
ஜனாதிபதி செயலகம்
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
பகுதியளவு
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
200
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு அலகு - அரசுக்குச் சொந்தமான நிறுனங்களை மறுசீரமைப்பதற்காக “அரசுக்குச் சொந்தமான நிறுவன மறுசீரமைப்பு அலகை” உருவாக்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்த ரூ.200 மில்லியனை ஒதுக்கீடு செய்ய நான் முன்மொழிகிறேன்
அரச நிறுவனம்
நிதி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்படாதது
முன்னேற்றக் கண்காணிப்பான்
குறிப்பிடத்தக்க அளவு
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
1,000
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
உள்நாட்டு விவசாய அபிவிருத்தி (DAD - Domestic Agriculture Development) மதிப்புச் சங்கிலி கருத்திட்டத்தை வலுப்படுத்துதல் - விவசாய மதிப்புச் சங்கிலிகளை உருவாக்குவதும் அவசியமாகும். இந்த நோக்கத்திற்காக உள்நாட்டு விவசாய அபிவிருத்தி மதிப்புச் சங்கிலி திட்டத்தை வலுப்படுத்த நான் முன்மொழிகிறேன். இதற்கான முன்னோடித் திட்டம் இலங்கை மத்திய வங்கியால் அதன் சொந்தி நிதியில் (ரூ,1 பில்லியன்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாட்டுச் சந்தையில் உற்பத்தியை ஊக்குவிக்கும் அதேவேளை அபிவிருத்தி பங்காளர்களின் உதவியுடன் இந்தத் திட்டத்தை 2023ம் ஆண்டில் விரிவாக்க எதிர்பார்க்கப்படுகிறது.
அரச நிறுவனம்
விவசாய அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளியிடப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
N/A
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
காலநிலை நிதியத்துடன் இணைந்து காலநிலை தாக்கங்களைக் குறைக்கும் திட்டம் - இலங்கையில் வானிலை மற்றும் காலநிலை தொடர்பான தாக்கங்களினால் விபத்துக்கள், பேரிடர்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் போக்கு அதிகரித்து வருவதால் காலநிலை தாக்கங்களைக் குறைப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்காக சுற்றாடல் விடயங்களைக் கையாளும் அமைச்சு பொருத்தமான திட்டத்தைத் தயாரிப்பதுடன் காலநிலை நிதியத்திடம் இருந்து தேவையான உதவியைப் பெற்று காலநிலை தாக்கங்களைக் குறைக்கும் திடடத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்
அரச நிறுவனம்
சுற்றாடல் அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
முன்னேற்றக் கண்காணிப்பான்
மோசம்
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
N/A
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
STEM பாடங்களுக்கு பல்கலைக்கழகங்களின் கிளைகளை உருவாக்குதல் - உலகிலுள்ள பல நாடுகள் தங்கள் வெளிநாட்டு ஒதுக்குகளைக் கட்டியெழுப்பும் நோக்கில் வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குகின்றன. தெற்காசிய பிராந்தியத்தில் பங்களாதேஷ், இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் வெளிநாட்டு ஒதுக்குகளை அதிகரிக்கும் வகையில் வெளிநாட்டு மாணவர்களை அனுமதிக்கின்றன. அதன்பிரகாரம், இலங்கையும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக தனியார் முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM ) ஆகிய பாடங்களுடன் நிதியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு நான் முன்மொழிகிறேன். இந்த நோக்கத்திற்காக நிறுவனங்கள் சட்டம் மற்றும் பல்கலைக்கழகங்கள் சட்டம் மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்ட விதிகளின் படி, தேவைப்படும்போது அவற்றைத் திருத்துவதற்கு உட்பட்டு, அவ்வாறான பல்கலைக்கழகங்களின் கிளைகளை உருவாக்க முதலீட்டுச் சபை மூலம் அரசாங்கம் அனைத்து வசதிகளையும் வழங்கும். உயர் கல்வியில் தனியார் முதலீட்டைக் கொண்டுவருவதன் மூலம் அரசாங்கத்தின் வளங்களை இலவசக் கல்விக்காகப் பயன்படுத்த முடியும் என்பதுடன் உண்மையில் தற்போதுள்ள நிலையை விட இன்னும் விரிவாக்க முடியும். இவ்வாறான பல்கலைக்கழங்களில் இலங்கை மாணவர்கள் கல்வி கற்பதற்கு புலமைப்பரிசில்களையும் வழங்க முடியும். கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கிளை வளாகத்தை குருநாகலில் திறப்பதற்கும் நான் முன்மொழிகிறேன்
அரச நிறுவனம்
கல்வி அமைச்சு/பாதுகாப்பு அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளியிடப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
200
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
அரசாங்க தொழிற்பயிற்சி நிலையங்களில் சமூக அலகுகளை உருவாக்குதல் - நகர் மற்றும் கிராமப்புற சமூகத்தில் வாழும் பலர் சிறு அளவிலான சுயதொழில் அல்லது வாழ்வாதாரத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சமூகத்திற்கு வாழ்க்கைத் தொழில்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் பகுதி நேர அல்லது குறுகிய கால தொழிற்பயிற்சியை அளிப்பதன் மூலம் அந்த வேலைகளில் உற்பத்தித்திறன், பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம். மேலும் உற்பத்திகளின் தரமும் அதிகரிக்கும். இந்த நோக்கத்திற்காக அரசாங்கத்தின் கீழ் செயற்பட்டுவரும் ஒவ்வொரு தொழிற்பயிற்சி நிலையத்திலும் சமூகத்தை வலுவூட்டும் பொருட்டு சமூக அலகு ஒன்றை உருவாக்க முன்மொழியப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சி நிலையத்தில் இல்லாத தொழில்நுட்பச் சேவைகள் வெளியிடங்களில் இருந்து பெறப்படுவதுடன் தொழிற்பயிற்சி வசதிகள் வழங்கப்படும். அதன் பிரகாரம் ஆன்லைனில் சுயதொழில் உணவு மற்றும் பானம் தயாரிப்பு, மீன் உலர்த்துதல் மற்றும் காய்கறிகளை உலர்த்துதல், தையல், நெசவு, பித்தளை மற்றும் இரும்புத் தொழில் ஆகிய வாழ்வாதாரத் தொழில்களுக்கான பயிற்சிகளை வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. பயிற்சிக்குப் பின்னர் சான்றிதழும் வழங்கப்படும். முறையான பயிற்சிக்குப் பின்னர் தற்போது ஈடுபட்டுவரும் தொழிலை திறமையாகச் செய்யமுடியும். எனவே உணவு மற்றும் பிற தயாரிப்புகளை தரத்துடன் வழங்க முடியும். அதன் மூலம் அவர்களுடைய பணிப் பாதுகாப்பை உறுதிசெய்வதுடன் அவர்களது தொழில்களை மேம்படுத்த முடியும். இந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்த ரூ.200 மில்லியனை ஒதுக்கீடு செய்ய நான் முன்மொழிகிறேன்
அரச நிறுவனம்
கல்வி அமைச்சு
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளியிடப்படவில்லை
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
N/A
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
புகையிரத சேவையின் தரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்த தனியார் முதலீடு - பொதுமக்களுக்கு பயனுள்ள உயர் தர போக்குவரத்துச் சேவையை வழங்குவதே அரசாங்கத்தின் முக்கியக் கடமையாக இருப்பதால், இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கனவேயுள்ள உட்கட்மைப்பைப் பயன்படுத்தி புகையிரதப் போக்குவரத்து சேவையை அபிவிருத்தி செய்ய தனியார் துறை முதலீடுகள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிரகாரம், களனிவெளி புதையிரத சேவையை முன்னோடித் திட்டமாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. போட்டித்தன்மையான ஏலத்தின் அடிப்படையில் முதலீட்டாளர்/கள் தெரிவுசெய்யப்படுவார்கள்.
அரச நிறுவனம்
N/A
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
முன்னேற்றக் கண்காணிப்பான்
வெளியிடப்படவில்லை