வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்:பாராளுமன்றத்திற்கு அப்பால்
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்: பாராளுமன்றத்திற்கு அப்பால் என்பது அரசாங்கம் அதன் வருடாந்த வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள செயற்திறனை கண்காணிப்பதற்காக publicfinance.lk இல் தொழிற்படும் ஒரு டாஷ்போர்ட் ஆகும்.
அதன் தொழிற்பாடு மற்றும் விரிவான விளக்கங்கள்
ஒவ்வொரு முன்மொழிவுகளினதும் செயன்முறை, முன்னேற்றம் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான விளக்கங்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும். மூல ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள தயவு செய்து pfp@veriteresearch.org ஐ அணுகவும்.
பதிவிறக்கம்
நடு - ஆண்டு
முன்மொழிவுகள் பட்டியல்
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்) |
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள் |
அரச நிறுவனம் |
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான் |
முன்னேற்றக் கண்காணிப்பான் |
---|---|---|---|---|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
43,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சமுர்த்தி, முதியோர், அங்கவீனர் மற்றும் சிறுநீரக நோயாளர்களின் கொடுப்பனவுகளின் பயனாளிகளுக்கு வழங்கப்படும் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளை தொடர்ந்து வழங்குதல். - பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சமுர்த்தி, முதியோர், அங்கவீனர் மற்றும் சிறுநீரக நோயாளர்களின் கொடுப்பனவுகளின் பயனாளிகளுக்கு வழங்கப்படும் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளை தொடர்ந்து வழங்குவதற்காக 43 பில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
|
அரச நிறுவனம்
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு | சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம்
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் சவளிப்படுத்தப்படவில் மல
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
2,000
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களின் மறுசீரமைப்பு மற்றும் கட்டுமானம் - வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைப்பதற்காக 2023 ஆம் ஆண்டில் ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி, கேனை ஆற்றின் குறுக்கே உள்ள கரகொட பாலத்தை சீர் செய்யவும், பதுளை ராஜ மாவத்தையின் எஞ்சிய பணிகளை முடிக்கவும், காலி மாவட்ட செயலகத்தின் எஞ்சிய பணிகளை முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
|
அரச நிறுவனம்
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு | வீதி அபிவிருத்தி அதிகாரசபை
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் சவளிப்படுத்தப்படவில் மல
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
500
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சிறுவர் போஷாக்கினை மேம்படுத்தல் - குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக தற்போதுள்ள ஊட்டச்சத்து துணை திட்டங்களை மேலும் வலுப்படுத்த ரூ. 500 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
|
அரச நிறுவனம்
சுகாதார அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் சவளிப்படுத்தப்படவில் மல
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
500
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வெள்ளப் பாதுகாப்பு முறைமையினை மேம்படுத்துதல் - வெள்ளப் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்காக மா ஓயா, அத்தன கலு ஓயா மற்றும் பெந்தர கங்கையை அடிப்படையாகக் கொண்ட நீர்ப்பாசன முறைமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு 500 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
|
அரச நிறுவனம்
நீர்ப்பாசன அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
முன் னனறியுள்ளத
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
300
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான புதிய பொருளாதார வலயங்களை அமைத்தல். - வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் மேல் மாகாணம், வடமேல் மாகாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலையில் புதிய பொருளாதார வலயங்களை அமைப்பதற்கு 300 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
|
அரச நிறுவனம்
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் சவளிப்படுத்தப்படவில் மல
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
250
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
முதியோர் / மாற்றுத் திறனாளிகள் / விதவைகள் வீட்டலகு தொழில்முயற்சியாளர்களை வலுப்படுத்துதல். - முதியோர்/மாற்றுத் திறனாளிகள்/குறைந்த வருமானம் பெறுவோர்/ விதவைகளின் திறன்கள் மற்றும் உழைப்பைப் பயன்படுத்தி பொருளாதார ரீதியாக வலுப்படுத்தவும், அதன் மூலம் தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பைப் பெறவும் ரூ. 250 மில்லியன்ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. மகளிர் விவகார அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சினால் இதற்கான வேலைத்திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
|
அரச நிறுவனம்
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் சவளிப்படுத்தப்படவில் மல
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
250
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
10 விவசாய தொழில்முயற்சியாண்மை கிராமங்களை நிறுவுதல் - விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை விவசாயத் தொழில்முனைவோராக மாற்றி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏற்றுமதி சார்ந்த பொருட்களை ஊக்குவிக்கும் வகையில், 10 வேளாண் தொழில்முனைவோர் கிராமங்களை நிறுவுவதற்கு ரூ. 250 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
|
அரச நிறுவனம்
நீர்ப்பாசன அமைச்சு | கமத்தொழில் அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
முன் னனறியுள்ளத
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
250
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
இளம் பெண் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான கடன் திட்டம் - சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் கடன் திட்டத்தின் கீழ் வராத வீட்டை அண்டிய முறைசாரா தொழில்களில் ஈடுபடும் இளம் பெண் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு ரூ . 250 மில்லியன் ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது.
|
அரச நிறுவனம்
நிதி அபிவிருத்தித் திணைக்களம் | மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் சவளிப்படுத்தப்படவில் மல
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
200
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
முதலீட்டுக்கு நட்புச் சூழல் - செலவுகள், நடைமுறைகள் மற்றும் நேரத்தை குறைத்து, வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் முதலீட்டிற்கு உகந்த சூழலை உருவாக்க தேவையான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சிற்கு ரூ. 200 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
|
அரச நிறுவனம்
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
மகவிடப்பட்டுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
200
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கறுவா தொழில்துறைக்கான புதிய திணைக்களம் - கரந்தெனிய பிரதேசத்தில் கறுவாத் தொழில்துறையின் அபிவிருத்திக்காக தனியான திணைக்களம் ஒன்றை நிறுவுவதற்கு ரூ. 200 மில்லியன் ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
|
அரச நிறுவனம்
பெருந்தோட்ட அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் சவளிப்படுத்தப்படவில் மல
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
200
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
கிராமிய பாடசாலைகளில் வசதிகளை மேம்படுத்துதல் - 139 மாகாணப் பாடசாலைகள், 23 தேசிய பாடசாலைகள் மற்றும் குறைந்த வசதிகளைக் கொண்ட கிராமிய பாடசாலைகளில் துப்பரவேற்பாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ. 200 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
|
அரச நிறுவனம்
கல்வி அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் சவளிப்படுத்தப்படவில் மல
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
200
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
புதிய மருத்துவ பீடத்தினை தாபித்தல் - மருத்துவ பீடங்களில் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஊவா-வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் கீழ் புதிய மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கு ரூ. 200 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
|
அரச நிறுவனம்
கல்வி அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் சவளிப்படுத்தப்படவில் மல
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
200
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
இலத்திரனியல் கொடுப்பனவு முறை - குறித்த பயன்பெறுநர்களுக்கு பண மாற்றல்கள் மற்றும் பொதுமக்களால் மேற்கொள்ளப்படும் பல்வேறு அரச நிறுவனங்களில் சேவைகளைப் பெறுவதற்கான கொடுப்பனவுகள் உட்பட அரசாங்க கொடுப்பனவுகளுக்கு இலத்திரனியல் கொடுப்பனவு முறையைத் தயாரிப்பதற்கு ரூ. 200 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
|
அரச நிறுவனம்
தொழில்நுட்ப அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
மகவிடப்பட்டுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
150
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
அறுவடைக்குப் பிந்தைய இழப்புக்களைக் குறைத்தல் மற்றும் களஞ்சியப்படுத்தலை மேம்படுத்துதல் - அறுவடைக்குப் பிந்திய இழப்புக்களைக் குறைப்பதற்குத் தேவையான அறிவு, தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ. 150 மில்லியன் ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
|
அரச நிறுவனம்
கமத்தொழில் அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் சவளிப்படுத்தப்படவில் மல
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
120
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
விவசாயத் தொழில்துறையில் இளைஞர்களைத் தக்கவைத்தல் - நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தற்போது வேலையில்லாத 240 இளைஞர்களை தெரிவு செய்து அவர்களை விவசாய தொழில்முயற்சியாளர்களாக மேம்படுத்துவதற்கு ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
|
அரச நிறுவனம்
கமத்தொழில் அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் சவளிப்படுத்தப்படவில் மல
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
100
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டு முகவராண்மை - முதலீடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கு ஏதுவாக ஒரு நிறுவனத்தை அமைக்க ரூ. 100 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. முதலீட்டுச் சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம், தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபை போன்றவற்றுக்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அமுல்படுத்துவதன் மூலம் இந்த நிறுவனம் அமைக்கப்படும்.
|
அரச நிறுவனம்
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் சவளிப்படுத்தப்படவில் மல
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
100
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழு - பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு ஒரு சுயாதீன நிறுவனமாக தேசிய உற்பத்தித் திறன் ஆணைக்குழுவை நிறுவுவதற்கு ரூ.100 மில்லியன் ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது.
|
அரச நிறுவனம்
கைத்தொழில் அமைச்சகம்
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் சவளிப்படுத்தப்படவில் மல
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
100
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
பல்கலைக்கழக பட்டங்களுக்கான தர உத்தரவாதம் மற்றும் சான்றுப்படுத்தல் சபை - பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் பட்டப் படிப்புகளின் தரம் மற்றும் சான்றுப்படுத்தலை உறுதி செய்வதற்காக தர உறுதி மற்றும் அங்கீகார சபை தாபிப்பதற்கு ரூ. 100 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
|
அரச நிறுவனம்
கல்வி அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
மகவிடப்பட்டுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
100
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
உள்நாட்டு மீன்பிடித் துறையினை விருத்தி செய்தல் - பொதுமக்களின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதற்காக உள்நாட்டு மீன்பிடித் தொழிலுக்கு வசதியாக தற்போதுள்ள மீன் வளர்ப்பு நிலையங்களின் இயலளவினை அதிகரிப்பதற்கு ரூ. 100 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
|
அரச நிறுவனம்
கடற்றொழில் அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையானது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
மகவிடப்பட்டுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
100
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
திரவப் பால் உற்பத்தியை அதிகரித்தல் - திரவப் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக குண்டசாலை செயற்கை சினைப்படுத்தும் நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கும் புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றுவதற்கும் 100 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
|
அரச நிறுவனம்
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம்
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்படாதது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
மகவிடப்பட்டுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
100
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
காலநிலை மாற்றங்கள் தொடர்பில் சர்வதேச பல்கலைக்கழகம் - அறிவு, அனுபவப் பகிர்வு, கல்வி, பயிற்சி, திறன்களை மேம்படுத்துதல், காலநிலை ஆபத்துக்களை குரைப்பதற்கான துறைகளில் திட்டங்களை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு ரூ. 100 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
|
அரச நிறுவனம்
கல்வி அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் சவளிப்படுத்தப்படவில் மல
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
100
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
மதுவரித் திணைக்களத்தின் கீழ் புதிய ஆய்வுகூடத்தை நிறுவுதல் - மதுபானப் பொருட்களின் தரத்தை பரிசோதிப்பதற்கும் தர நியமங்களை தயாரிப்பதற்கும் ஒரு பொறிமுறையாக மதுபானப் பொருட்கள் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக மதுவரித் திணைக்களத்தின் கீழ் ஆய்வுக்கூடம் ஒன்றை நிறுவுவதற்கு ரூ. 100 மில்லியன் ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது.
|
அரச நிறுவனம்
மதுவரித் திணைக்களம்
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் சவளிப்படுத்தப்படவில் மல
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
100
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வீதி பராமரிப்பு நிதியம் ஒன்றினை நிறுவுதல் - வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளும் போது வாகனம் ஒன்றுக்கு ரூபா 100 இற்கு குறையாத வருடாந்த கட்டணத்தை அறவிடுவதன் மூலம் அனைத்து வகையான வீதிப் பராமரிப்புகளையும் வழங்குவதற்கு வீதிப் பராமரிப்பு நிதியத்தை நிறுவுவதற்கு ரூ. 100 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
|
அரச நிறுவனம்
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
மட்டுப்படுத்தப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் சவளிப்படுத்தப்படவில் மல
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
100
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
சிறைக்கைதிகளுக்கான துப்பரவேற்பாடு - சிறைக்கைதிகளின் துப்பரவேற்பாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ. 100 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது, ஏனெனில் தற்போது கைதிகளின் எண்ணிக்கையானது (சந்தேக நபர்கள் உட்பட) சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கீழ் வருகின்ற சிறைச்சாலைகளின் அனுமதிக்கப்பட்ட இயலளவை விட அதிகமாக உள்ளது.
|
அரச நிறுவனம்
சிறைச்சாலைத் திணைக்களம்
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
ஒத்துழைக்கப்பட்டது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
மகவிடப்பட்டுள்ளது
|
ஒதுக்கீடு (ரூபா மில்லியன்)
60
|
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்
வைத்தியர்களுக்கான பட்டபின் படிப்பு வாய்ப்புகள் - பேராதனை, ருகுணு மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்களில் வைத்தியர்களுக்கான பட்டப்பின்படிப்புத் திட்டங்களை நிறுவுவதற்கு ரூ. 60 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகளை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்த பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும். வைத்தியர்களுக்கு உள்நாட்டிலேயே பட்டபின்படிப்பு கற்கைகளை மேற்கொள்வதற்கான தேசிய கொள்கையை தயாரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
|
அரச நிறுவனம்
கல்வி அமைச்சு
|
வெளிப்படைத்தன்மை கண்காணிப்பான்
வெளிப்படையற்றது
|
முன்னேற்றக் கண்காணிப்பான்
தகவல் சவளிப்படுத்தப்படவில் மல
|